ஆவடி மெட்ரோவை திருநின்றவூர் வரை விரிவுபடுத்தணும் - கோரிக்கைகள் முன்வைக்கும் உள்ளூர் வாசிகள்!
சென்னை கோயம்பேடு - ஆவடி பகுதிகளுக்கு இடையேயான மெட்ரோ பணிகள் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.
மெட்ரோ
சென்னையின் பல பகுதிகளிலும் மெட்ரோ பணிகள் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே பல இடங்களில் பூந்தமல்லி - போரூர், கோயம்பேடு - மாதவரம் இடையே பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
[FU0CHE[
இந்த சூழலில் தான், சென்னை கோயம்பேடு - ஆவடி பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக திட்டம் தயாராகி வருகிறது. சென்னை அம்பத்தூர் முக்கிய ஐடி தொழில் நடைபெறும் இடமாக உள்ளது. நகரின் பல பகுதிகளில் இருந்து பலரும் இங்கு வந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
திருநின்றவூர் வரை
அதன் காரணமாகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் நவம்பர் மாதத்தில் இந்த திட்டத்திற்கான அறிக்கை தயாராகி விடும் என கூறப்படும் நிலையில் தான், மற்றுமொரு வலியுறுத்தல் வைக்கப்படுகிறது.
அதாவது, தற்போது சென்னையை அடுத்த பட்டாபிராமில் tidel park கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகளும் பெரிய ஐடி இடமாக மாறும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையின் லிமிட் என்பது திருநின்றவூர் வரை விரிவாக்கப்பட்ட விட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் திருநின்றவூர் நகராட்சியாக மாறிவிட்டது.
இந்த திருநின்றவூர் வரை ஆவடி - கோயம்பேடு மெட்ரோவை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள், உள்ளூர் வாசிகள்.
இதன் காரணமாக, பலரும் பயன்பெறுவார்கள் என கூறும் உள்ளூர் வாசிகள், அதே நேரத்தில் இதனால் போக்குவரத்து நெரிசலும் பெரிதாக குறையும் என கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது.
இதில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.