Junior Wife வேண்டும் - Urgent Hiring...ஆர்வக்கோளாறில் பதிவிட்டு சிக்கி கொண்ட Software Engineer

India Marriage
By Karthick Apr 11, 2024 02:37 AM GMT
Report

வேலைக்கு ஆட்களை தேடுவதை போல, தனக்கு மனைவி வேண்டும் என ஒருவர் பதிவிட அவர் ட்ரோல்கள் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார்.

Junior wife

சமூகவலைத்தளங்களில் வேலைக்காக Ad போஸ்ட் செய்வது போல் இங்கே ஒரு Software Engineer தனக்கு மனைவி வேண்டும் என கூறி போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

need-junior-wife-ad-software-engineer

அவரின் பதிவு வருமாறு, 

#hiring அவசரம்

எனது வாழ்க்கையில் இணைவதற்கு ஒரு "Junior Wife" தேடிக் கொண்டிருக்கிறேன்.

குறிப்பு - அனுபவம் வாய்ந்த கேன்டிடேட் ( Wifes ) இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

அவர்களை நான் பின்னர் தனியாக சந்தித்துக் கொள்கிறேன்.

வேலை வகை: வாழ்க்கை முழுவதும் கெரியர் லெவல் - என்ட்ரி லெவல் (முற்றிலும் அனுபவம் இல்லாதவர்கள் மட்டுமே தேவை)

need-junior-wife-ad-software-engineer

சம்பளம் - ரகசியம்

மொத்தம் 3 சுற்றுக்களாக நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இறுதிச் சுற்று - நேருக்கு நேர்.

தேவையானவை - சமையலில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம் தேவை.

இரவில் எழுந்து, எனக்கு மணக்க மணக்க பிரியாணி செய்து கொடுக்கக் கூடிய திறமை இருக்க வேண்டும்

நல்ல தகவல் தொடர்பு திறமை இருக்க வேண்டும்

மரியாதைக்குரியவராக, நாகரீகமானவராக இருக்க வேண்டும்

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

கீழ்ப்படிதல் அவசியம், அன்பு செலுத்துபவராக இருக்க வேண்டும்

 கோல் ஓரியன்டட் ( நான் என்னெல்லாம் வேலை செய்கிறேனோ அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்)

விருப்பமானவர்கள், எனது இன்பாக்ஸுக்கு சுயவிவரத்தை அனுப்பி வைக்கலாம்.

இப்படி அவர் பதிவிட இதனை கண்ட பலரும், அவரை வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர். குறிப்பாக சமூகவலைத்தள ட்ரோல்களின் சென்டர் பாயிண்ட்டாக அவர் தற்போது மாறியுள்ளார்.