உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் பிரகாசம் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி

United States of America Death
By Sumathi May 04, 2023 06:40 AM GMT
Report

மனிதன் இறக்கும் போது மூளையில் ஒருவித வெளிச்சம் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாயத்தோற்றம்

அமெரிக்காவில் உள்ள மிக்கிகான் மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், கோமாவால் பாதிக்கப்பட்ட 2 நபர்களின் மரணிக்கும் தருவாயை ஆராய்ச்சி செய்தனர். இதற்காக அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் அவர்களின் சுவாசக் கருவி அகற்றப்பட்டது.

உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் பிரகாசம் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி | Near Death Experiences

அப்போது அவர்களின் மூளையின் மையப்பகுதியில் ஒருவித காமா கதிர்கள் உருவாகியுள்ளன. பின்னர் சிறிது சிறிதாக அவை விரிவடைந்து, மூளையின் இரண்டு பகுதிகளுக்கும் இடையே ஒரு பெரிய மின்சார அலைகளை போல உருவெடுக்கிறது.

பிரகாசம்

இந்த நேரத்தில்தான் அந்த நபர்களின் உயிர் பிரிகிறது. மரணிக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களிடம் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் போது, பலர் பெரு வெளிச்சத்தை தாங்கள் பார்ப்பதாகவும், அதை தொடர்ந்து ஒரு மாயத்தோற்றமும், பின்னர் தங்களுக்கு தெரிந்த பல முகங்களும், சம்பவங்களும் வேகமாக நகரும் ஸ்லைடுகளை போல கண் முன்னே தெரிவதாகவும் கூறி இறந்துள்ளனர்.

உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் பிரகாசம் - ஆய்வாளர்கள் அதிர்ச்சி | Near Death Experiences

மேலும், ஆன்மீகத்தின் படி ஒரு உயிர் பிரிந்த பின்பு மற்றொரு உயிராக அது பிறக்கும். அப்படி பிறப்பதற்கு அந்த உயிர் அண்டவெளியை அடைவதாக ஆன்மீகம் கூறுகிறது. இந்த அண்டவெளிதான் அத்தகைய வெளிச்சத்தோடு இருப்பதாகவும், அங்கு சென்றுவிட்டால் மறு பிறவியை அடைவதற்கான வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.