6 மாதங்களில் மனித மூளையில் சிப்: சோதனையில் 1500 விலங்குகள் மரணம் - பகீர்!

Elon Musk
By Sumathi Dec 08, 2022 07:11 AM GMT
Report

 6 மாதங்களில் மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மூளையில் சிப்

எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அதில் முதற்கட்ட சோதனை குரங்குகளை வைத்து நடைபெற்றது. இதில் கணினி மூலம் மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.

6 மாதங்களில் மனித மூளையில் சிப்: சோதனையில் 1500 விலங்குகள் மரணம் - பகீர்! | Elon Musks Brain Implant Firm

இதுகுறித்து பேசிய எலான் மஸ்க், 6 மாதங்களில் மனித மூளையிலும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும். இந்த சிப் மூலம் எண்ணங்கள் வழியாக கணினியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியும். விரைவில் தானும் ஒரு சிப்பை தமது மூளையில் வைத்துக்கொள்ளப் போகிறேன்.

விலங்குகள் பலி

இந்த சோதனைகளுக்கு 6 மாதங்களில் அனுமதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 2018 - ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், ஆடுகள், பன்றிகள், எலிகள், குரங்குகள் என்று சுமார் 1,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விலங்குகள் நல சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.