மூளைக்குள் சிப் பொருத்தப்பட்ட குரங்கு வீடியோ கேம் விளையாடும் அதிசய நிகழ்வு
மனித மற்றும் விளங்காடுகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் முயற்சியில் வெற்றிகண்ட வேளாண் மாஸ்க். உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் எலன் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்த இவர், நியூராலிங்க் எனப்படும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இதில் மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறு ஒயர்களை கொண்ட சிப் போன்ற ஒயர்லெஸ் கருவியை பொருத்தியுள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இணையவழியே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி பல்வேறு தரப்பினரை பெரும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்த முதல் ஆராய்ச்சி வெற்றியடைந்ததில் மிகவும் சந்தோஷத்தில் அந்நிறுவனத்தினர் குதூகலமாகியுள்ளனர். மேலும் அடுத்தடுத்த கட்டங்களில் இந்த ஆராய்ச்சி வெற்றிப் பெற்றால் மறதி நோய் மற்றும் முதுகெலும்பு காயங்கள் அனைத்து எளிதில் குணப்படுத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.