210 தொகுதிகளில் வெற்றி.. பெரும்பான்மையுடன் ஆட்சி! எடப்பாடி பழனிசாமி
NDTVயின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி.
210 தொகுதிகளில் வெற்றி
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 210 இடங்களில் NDA கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும், மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம், அதுதான் எங்கள் நோக்கம், எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

டிடிவி தினகரன் இணைந்தது பற்றி
டிடிவி தினகரன் அதிமுக-வில் இருந்தவர், எங்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தனி இயக்கம் கண்டார், தற்போது மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதால் ஒன்றிணைந்துவிட்டோம், கூட்டாகத்தான் பேட்டி கொடுத்தால், அழுத்தத்திற்கு ஆளாகவில்லை, இருவருடைய கருத்தும் ஒன்றாக இருந்ததால் இணைந்தோம்.

அரசியலில் விஜய்யின் செயல்பாடுகள்
விஜய் சிறந்த நடிகர், அதில் மாற்றுக்கருத்து இல்லை, அவர் நம்புவது அவரது ரசிகர்களை, நாங்கள் நம்புவது மக்களை, நான் அரசியலுக்கு வந்து 51 ஆண்டுகள் ஆகிறது, படிப்படியாக அரசியலில் உயர்ந்தவன் நான், எந்த மாவட்டத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என நன்றாக தெரிவும், விஜய் புதிதாக வந்தவர், தேர்தல் முடிந்த பின்னர் தான் அவரைப்பற்றி சொல்ல முடியும்.

திமுக-வின் பிரச்சனைகள்
திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது, அப்படியென்றால், காங்கிரஸுக்கு திமுக 'பி' டீமா?
திமுகவைப் பொறுத்தவரை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகாரத்துக்கு வரமுடியும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அனுபவிக்கிறார்கள். அதுதான் வாரிசு அரசியல்.
திமுக- காங்கிரஸ் இடையே கருத்து யுத்தம் நடக்கிறது. திமுக ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி முழுமையாக தெரியாது. அவர்கள் கூட்டணி நிலைக்குமா?, நிலைக்காதா? என்று தெரியவில்லை.
525 வாக்குறுதிகள் வெளியிட்டனர். நான்கில் ஒரு பங்கு தான் நிறைவேற்றினர். பெயர் வைப்பதில் வல்லவர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஊழல் நடக்காமல் இருக்குமா?
ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுதான் இந்த தேர்தலின் நோக்கமாக இருக்கும்.
