அதிமுகவில் சேர்க்க மறுத்த எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் கொடுத்த பதில்
ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இன்னும், தேமுதிக, ராமதாஸ் தரப்பு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மட்டுமே தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
அதிமுகவில் சேர்க்க மறுத்த இபிஎஸ்
நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், "டிடிவி தினகரன் அவருடைய அன்பு அண்ணன் இபிஎஸ்ஸிடம் பேசி முடிவெடுக்க சொல்லுங்கள், நான் இணைய தயார்" என கூறினார்.

இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஓபிஎஸ் கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை" என தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் பதில்
எடப்பாடி பழனிசாமியின் கருத்திற்கு பதிலளித்த ஓபிஎஸ், "அது பழைய செய்தி" என தெரிவித்துள்ளார்.
தற்போதயை நிலையில், ஓபிஎஸ் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லாத போது அடுத்தகட்டமாக என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.