இந்தோனேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் இந்து பல்கலைக்கழகம் - பின்னணி என்ன?

Indonesia World
By Jiyath Mar 05, 2024 07:47 AM GMT
Report

இந்தோனேசியாவில் முதல் முறையாக இந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா 

இந்தோனேசியா நாட்டில் 86% மேல் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இதனால் அதிக இஸ்லாமிய மக்கள் தொகையை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. அதேபோல் இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்தோனேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் இந்து பல்கலைக்கழகம் - பின்னணி என்ன? | Ndonesia Gets First State Hindu University

இந்த பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் கடந்த 1993-ம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 1999-ம் ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் இந்த 2 மாநிலங்களுக்கு தலைநகரம் ஒன்றுதான்!

தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் இந்த 2 மாநிலங்களுக்கு தலைநகரம் ஒன்றுதான்!

இந்து பல்கலைக்கழகம்

இதனையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு இந்த கல்லூரி இந்து தர்ம அரசு நிருவமானமாக (ஐஎச்டிஎன்) மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் ஆணையில் அந்நாட்டு அதிபர் ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் இந்து பல்கலைக்கழகம் - பின்னணி என்ன? | Ndonesia Gets First State Hindu University

அதன்படி, இந்தோனேசியாவின் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி (யுஎச்என்)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்ஸங்களையும் உள்ளடக்கி இந்த பல்கலைக்கழகம் செயல்படும்.