தெரியுமா உங்களுக்கு? இந்தியாவின் இந்த 2 மாநிலங்களுக்கு தலைநகரம் ஒன்றுதான்!
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் தலைநகரம் குறித்த தகவல்.
தலைநகரம்
இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கும் ஒரே நகரம் தலைநகராக விளங்குகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் தலைநகரமும் சண்டிகர் தான்.
ஆனால் இந்த நகரம் நிர்வாக ரீதியாக இந்த இரண்டு மாநிலத்தின் கீழும் இல்லை. யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சியாளராக பஞ்சாப் ஆளுநர் இருக்கிறார்.
பெயர்க்காரணம்
இதன் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் பஞ்சம் மாநிலமும், கிழக்கில் ஹரியானா மாநிலமும் எல்லையாக உள்ளது. சண்டிகோவில் என்ற பெயரிலிருந்து தான் இந்த நகரத்தின் பெயர் வந்தது.
சண்டிகர் என்றால் சண்டி தேவியின் கர் அல்லது கோட்டை என்று பொருள். சமீபத்தில் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தல் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.