சபிக்கப்பட்ட தீவு.. சொந்தமாக வாங்கிய எல்லோரும் மர்ம மரணம் - அதிர்ச்சி பின்னணி!
இத்தாலியில் உள்ள கயோலா எனும் மர்மமான சபிக்கப்பட்ட தீவு குறித்த தகவல்.
சபிக்கப்பட்ட தீவு
இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் வளைகுடாவில் கயோலா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவை எல்லாருமே சபிக்கப்பட்ட தீவு என அழைக்கிறார்கள். ஏனெனில் இந்த தீவை சொந்தமாக வாங்கிய அனைவரும் தீரா கஷ்டத்தில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
1800-ன் பின்பகுதியில் லூகி நெக்ரி என்பவர் இந்த தீவை வாங்கி ஒரு மாளிகை கட்டியுள்ளார். ஆனால் வாங்கிய சில காலத்திலேயே சொத்துகள் அனைத்தையும் இழந்து நெக்ரி நடுத்தெருவிற்கு வந்துள்ளார்.
பின்னர் கேஸ்பேர் ஆல்பெங்கே என்ற கப்பல் மாலுமி 1911-ம் ஆண்டு இந்த தீவை வாங்கியுள்ளார். ஆனால் சில நாட்களிலேயே கப்பல் விபத்தில் இறந்துள்ளார். இதனையடுத்து 1920-ல் ஹான்ஸ் ப்ரான் என்பவர் இந்த தீவை வாங்கிய சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.
அதிர்ச்சி பின்னணி
இப்படி வரிசையாக இந்த தீவை வாங்கிய அனைவரையும் மனநல பாதிப்பு, தற்கொலை, மரணம் என துரதிஷ்டம் விடாமல் துரத்தியது. கடைசியாக இந்த தீவு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அவர் கடன் செலுத்தாததால் சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவரது மனைவியும் கார் விபத்தில் இறந்து போனார். இதனால் தான் சபிக்கப்பட்ட தீவு என கயோலா தீவு அழைக்கிறார்கள்.
இந்த தீவு 1978-ம் ஆண்டுக்கு பிறகு இத்தாலிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது கயோலா தீவில் 100 ஏக்கர் பரப்பளவில் கடல் வாழ் உயிரினம் குறித்த ஆய்வு மையம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை கற்றுக் கொடுக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.