உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட அதிசய மனிதர்கள் வாழும் இடம் பற்றி தெரியுமா?
உலகின் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்ட மனிதர்கள் வாழும் இடம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
மனிதர்கள் ஆயுட்காலம்
பொதுவாக மனிதர்களின் ஆயுட்காலம் அவரவர் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் பொறுத்தே அமையும். கடந்த 50 ஆண்டுகளை விட தற்பொழுது மனிதரின் ஆயுட்காலம் சராசரியாக அதிகரித்துள்ளது. கடந்த 1960-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் அளித்த தகவலின் படி மனிதனினி சராசரி ஆயுட்காலம் 52 ஆக இருந்தது, அது தற்பொழுது 72 ஆக அதிகரித்துள்ளது.
பூரண இதிகாசங்களில் கூட மனிதரின் ஆயுட்காலம் குறித்து நம்மால் காணமுடியும், அதில் 200 ஆண்டு வரையில் வாழ்ந்தார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் தற்பொழுது கலியுகத்தில் வாழும் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்துள்ளது.
அதிசய தீவு
இந்நிலையில், முன்னர் இருந்த காலத்தை போலவே தற்பொழுதும் நீண்ட ஆயுளுடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் மனிதர்கள் வாழ்கின்றனர். அந்த இடம் ஜப்பானில் உள்ள ஒகினாவா தீவு தான், அதனை “மரணமில்லாதவர்கள் வாழும் இடம்” அல்லது “அமரர்கள் வாழும் தீவு” என அழைக்கப்படுகிறது.
ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது. உலகின் ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் இடத்தை "ப்ளூ சோன்" என்று அழைக்கின்றனர். உலகில் மொத்தமாக ஐந்து ப்ளூ சோன்கள் உள்ளது அதில் இந்த ஒகினாவா தீவும் ஒன்று.
மேலும், 2020-ம் ஆண்டில் கணக்கெடுப்பின் படி இந்த தீவில் வாழும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகளாகும். ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகளாகும்.