பூமியில் வாழும் ‘மனித சாத்தான்’ - பொதுமக்கள் அதிர்ச்சி
பிரேசில் நாட்டில் ஏலியனை போன்று காட்சி அளிக்க விரும்பிய நபர் செய்த செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பரந்து விரிந்த இந்த உலகத்தில் நமது பூமியைப் போலவே பல்வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழும் சூழல் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். உலகெங்கும் இது தொடர்பான ஆய்வுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் ஏலியன்கள் குறித்த ஆய்வு மிக முக்கியமானது. அடிக்கடி இவை தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.
இதனிடையே பிரேசில் நாட்டைச் சேர்ந்த மிச்செல் ஃபாரோ டோ பிராடோ என்பவர் ஏலியனைப் போல காட்சியளிக்க விரும்பி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அதன்படி அவரது தலையில் கொம்புகள் பதிய வைக்கப்பட்டு உள்ளது. மூக்கின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு வயிற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏலியன் தோற்றத்தில் தெரிய கை விரல்களில் ஒன்றையும் அவர் நீக்கிய ஃபாரோ டோ பிராடோ வினோத உருவ அமைப்புடன் காணப்பட கூடிய அவர் மனித சாத்தான் என்று அழைக்கப்படுகிறார்.
இதனிடையே கொரோனா காலத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என கூறப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் காதுகள் இருந்தால் தானே மாஸ்க் தேவைப்படும் என கருதிய மிச்செலுக்கு தற்போது இரண்டு காதுகளும் கிடையாது.
இதுதொடர்பான அறுவை சிகிச்சையை கட்டூ மொரினோ என்ற மெக்சிகோ நாட்டை சேர்ந்த உடல் வடிவமைப்பாளர் செய்துள்ளார். இப்படி வித்தியாச தோற்றத்துடன் இருந்தாலும் தனக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருப்பதாக மிச்செல் தெரிவித்துள்ளார்.