MCG டெஸ்ட் போட்டி.. அதிக ரன்களை அடித்த டாப் 5 இந்திய வீரர்கள் - லிஸ்ட் இதோ!
டெஸ்ட் அரங்கில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை அடித்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
MCG டெஸ்ட் போட்டி
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் 30 வரை நடைபெற உள்ளது. மெல்போர்னில் உள்ள சின்னமான ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மா தலைமையில் நடந்த கடைசி இரண்டு டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 14 முதல் 18 வரை பிரிஸ்பேனில் உள்ள கபாவில் இரு அணிகளுக்கு இடையே நடந்த 3வது போட்டியில் ஆஸி.க்கு எதிராக டிராவில் விளையாடிய பிறகு இந்தியா நான்காவது டெஸ்ட் விளையாடுகிறது.
அந்த வகையில் டெஸ்ட் அரங்கில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து தெரிந்துள்ளலாம்.
அதிக ரன்கள்
1.சச்சின் டெண்டுல்கர்
அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுமார் 5 போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 449 ரன்களை குவித்துள்ளார்.
2. அஜிங்கயா ரஹானே
3 போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 369 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 73.80 ஆகும். தற்போது இந்திய அணியில் இடம்பெறவில்லை.
3. விராட் கோலி
இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 6 இன்னிங்ஸ்களில் 316 ரன்களை அவர் குவித்துள்ளார். அவரின் சராசரி 52.66 ஆக உள்ளது. இங்கு அவர் 2 அரைசதங்கள், 1 சதம் அடித்துள்ளார்.
4. வீரேந்தர் சேவாக்
2 போட்டிகளில், 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 280 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 70.00 ஆகும்.
5. ராகுல் டிராவிட்
4 போட்டிகளில் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 263 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்களை அடித்துள்ளார். அவரின் சராசரி 30.09 ஆகும்.