திராவிடக் கட்சிகள் இல்லாத NDA கூட்டணி..நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை உறுதி!

Tamil nadu K. Annamalai
By Swetha Aug 23, 2024 03:51 AM GMT
Report

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில், திராவிடக் கட்சிகள் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணி,

திராவிடக் கட்சிகள் இல்லாத NDA கூட்டணி..நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை உறுதி! | Nda Will Rule Tamil Nadu In 20206 Says Annamalai

மிகவும் பலமான சக்தியாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 68,045 பூத்களில் 7,174 பூத்களில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி முதலிடத்தைப் பிடித்தது. 18,086 பூத்களில் நமது கூட்டணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத கூட்டணியை அமைத்து, தமிழகத்தில் 37 சதவீத பூத்களில், நாம் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளோம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இதுவே நமது வெற்றிக்கு முதல் படி. தி.மு.க. ஆட்சியில்,

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

தேர்தல் தோல்வி எதிரொலி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றமா?

NDA கூட்டனி..

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் என, பொதுமக்கள் தி.மு.க. ஆட்சியின் மீது வெறுப்படைந்து இருக்கிறார்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு திராவிடக் கட்சிகளும், பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன.

திராவிடக் கட்சிகள் இல்லாத NDA கூட்டணி..நிச்சயம் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை உறுதி! | Nda Will Rule Tamil Nadu In 20206 Says Annamalai

பாஜக, தமிழகத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி, 18 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பா.ஜ.க. தனித்து 11 சதவீதத்துக்கும் அதிகமான

வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து நம் உழைப்பை வழங்கும்போது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.