தொகுதி முரண்பாடு - ED தொல்லை - பின்தங்கும் I.N.D.I முந்துகிறதா NDA ..?
இந்திய கூட்டணி தலைவர்கள் பலர் அமலாக்கத்துறையினால் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.
I.N.D.I கூட்டணி
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து I.N.D.I என்ற கூட்டணியை வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைத்துள்ளது. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மீ கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஜார்க்கண்ட் முகிதி மோர்ச்சா என பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
பாஜகவின் NDA கூட்டணி இன்னும் தொடரும் நிலையில், பாஜக வலுவாக இருக்கும் சூழலிலும் அந்த கூட்டணியில் இருந்து நீண்ட காலமாக நீடித்த பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய கட்சியான சிரோமணி அகாலி தளம், தென்னிந்தியாவில் மிக பெரும் உறுதுணையாக இருந்த அதிமுக வெளியேறியது சற்று சருக்கலான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், I.N.D.I கூட்டணியின் பல தலைவர்கள் அமலாக்கத்துறையால் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முக்தி மோர்ச்சா கட்சியின் முதலமைச்சர் ஹேமந்த சோரன் தனது முதல்வர் பதவியை இழந்துள்ளார்.
ஆம் ஆத்மீ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, பீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் லாலு பிரசாத் யாதவ் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினரும் அமலாக்கத்துறையால் பாதிக்கப்படுகிறார்கள்.
பிரச்சனை
இது ஒரு புறம் இருக்க, மாநில அரசியலை மையமாக கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ, போன்ற கட்சிகள் தேர்தல் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் முரண்பட்டு நிற்கின்றன.
ஆனால், NDA காம்பௌண்டில் அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
இந்த சூழலை கணக்கில் கொண்டால், NDA கூட்டணியின் கை சற்று ஓங்கி இருப்பதாக தெரியும் நிலையில், சில முரண்பாடுகளை I.N.D.I கூட்டணி சரிசெய்து கொண்டால், சமமான போட்டியே நீடிக்கிறது என்று சொல்லாம்.