Thursday, May 1, 2025

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

Jharkhand Mukti Morcha Jharkhand
By Nandhini 2 years ago
Report

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மருத்துவமனையில் அனுமதி

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் (79) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதன்ல், அவர் ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2005ம் ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்துள்ளார்.

இதன் பின்பு, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை, பின்பு, 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, அவரது மகனும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.  

shibu-soren-president-of-jharkhand-mukti-morcha