ஒரே கேள்விதான்? வன்மத்த கக்காதீங்க - கடுப்பில் சாடிய அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss Coimbatore
By Sumathi Jul 10, 2023 04:30 AM GMT
Report

செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமனி ராமதாஸ் கடுப்பாகி பதிலளித்தார்.

அன்புமனி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மாமன்னன் படம் பார்த்திவிட்டீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

ஒரே கேள்விதான்? வன்மத்த கக்காதீங்க - கடுப்பில் சாடிய அன்புமணி ராமதாஸ்! | Nbumani Ramadoss Angry Before Press Meet

அதற்கு பார்க்கவில்லை எனக் கூறினார். தொடர்ந்து, பல அரசியல் கட்சியினரும் இந்தப் படம் குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்கள் பார்க்கவில்லை என்கிறீர்கள், ஏற்கனவே பாமக ஒரு சாதிய கட்சி என்று பெயர் இருக்கும்போது.. என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு.

வன்மம் வேண்டாம்

உடனே கோபமாக அன்புமணி ராமதாஸ், யார் சொன்னது? எந்த மக்கள் சொன்னது? அது உங்கள் மனதில் இருக்கும் வன்மம். மக்கள் அப்படி நினைக்கவில்லையே. உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள். இப்படியே உங்கள் வன்மத்தை கக்கிக் கக்கி தமிழ்நாட்டில் நாங்கள் செய்த சாதனைகளை மறைக்கிறீர்கள்.

நாங்கள் முதல் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலித் எழில்மலைக்கு 1998ல் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். நாங்கள் கொடுத்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி திமுக கொடுத்தது. எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகம் செய்த கட்சி திமுகவோ, அதிமுகவோ, வேற எந்தக் கட்சியோ கிடையாது, பாட்டாளி மக்கள் கட்சிதான். நாங்கள் பட்டியல் போட்டால் எவ்வளவோ இருக்கிறது. அவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம்.

எனவே உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தைக் கக்க வேண்டாம். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அதை 2026ல் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் எனத் தெரிவித்தார்.