முதலமைச்சர் ஆசையெல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
தருமபுரி தொகுதியில் தோல்வியடைந்த அன்புமணி ராமதாஸ் அதிமுக சார்பில் மாநிலங்களைஉறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக -பாமக கூட்டணி பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்யவில்லை.
அந்த ஆசை இல்லை
அதைனைதொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணியில் பாமக ஈடுபாடு காட்டவில்லை. தற்போது நடைபெற்று முடிந்த ஈரோடு இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளிக்கவில்லை.
இந்நிலையில், பாமக மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை அடையாறில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமனி ராமதாஸ், தமிழ்நாட்டின் பாமகவின் ஆட்சி, அதிகாரம் விரைவில் வரும் என்றும், தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும் தெரிவித்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘என்.எல்.சி தரகர் போல வேளான் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செயல்படுகிறார் என்றார்.
மேலும், காவல்துறையை வைத்து அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருவதை தடுத்து நிறுத்தி 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அரசு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.