இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு எங்களிடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ் பேச்சு

Anbumani Ramadoss PMK
By Swetha Subash May 23, 2022 01:50 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட பேசிய அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., “ தமிழகத்தின் முன்னேற்றம் தான் பா.ம.க.வின் இலக்காகும். அதிகாரம் இல்லாமலேயே தமிழகத்திற்கு பல முன்னேற்றங்களை செய்து வந்துள்ளோம். மேலும் நம்மிடம் அதிகாரம் இருந்தால் பல முன்னேற்றங்களை செய்து தர முடியும். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பா.ம.க.விடம் தீர்வு, செயல் திட்டங்கள் உள்ளன.

இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு எங்களிடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ் பேச்சு | Anbumani Ramadoss Say Pmk Has Agenda To Run India

பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். வருகின்ற தலைமுறையை காக்க 2026-ல் பா.ம.க. ஆட்சிக்கு வரவேண்டும். திராவிட மாடல் என அவர்கள் கூறுகின்றனர். நாம் பாட்டாளி மாடல் எனக் கூறி வருகிறோம்.

தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை தமிழகத்தை ஜார்கண்டோடு ஒப்பிடக்கூடாது. சிங்கப்பூருடன் தான் ஒப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் சாராயக்கடைகள் இருக்கக்கூடாது. பெண்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். வேலையின்மையை ஒழிக்க வேண்டும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

இந்தியாவை வழி நடத்தும் அளவுக்கு எங்களிடம் செயல்திட்டங்கள் உள்ளன- அன்புமணி ராமதாஸ் பேச்சு | Anbumani Ramadoss Say Pmk Has Agenda To Run India

இதுதான் பாட்டாளி மாடல் ஆகும். தமிழக மக்கள் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.அதனை நாம் வாக்கு வங்கிகளாக மாற்ற வேண்டும். இந்தியாவை வழி நடத்துகிற அளவுக்கு பா.ம.க.விடம் செயல்திட்டங்கள் உள்ளன.

பா.ம.க.விடம் ஆட்சி அதிகாரம் இருந்தால், தமிழகத்தில் 75 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஏரிகளை மூடி குடியிருப்புகளை கட்டியது தான் திராவிட மாடலாகும். தொலைநோக்குப் பார்வை திராவிட கட்சிகளிடம் இல்லை.

சென்னையை சுற்றி 10 புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும். திராவிட கட்சிகளிடம் பணம் உள்ளது. நம்மிடம் உழைப்பு உள்ளது. 2026-ல் உழைப்பு நிச்சயம் வெற்றி பெறும். பாமக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும்.” என தெரிவித்தார்.