12 வயது வித்தியாசம்; பகத் பாசிலை இதனால்தான் கல்யாணம் செய்தேன் - நஸ்ரியா பளீச்!
பகத் பாசிலை திருமணம் செய்ததற்கான காரணம் குறித்து நஸ்ரியா பகிர்ந்துள்ளார்.
நஸ்ரியா
மலையாளத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நஸ்ரியா தமிழ் சினிமாவிற்கு நேரம் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார்.
மேலும் நய்யாண்டி,வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா என வரிசையாக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன இந்த நிலையத்தில் பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த நஸ்ரியா இப்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்ரியா, "நானும் பகத் பாஷிலும் ஒரு திரைப்படத்தில் இணைந்து வேலை செய்தோம்.
அப்போது அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நான் எனது காதலை கூறினேன். நான் உங்களை ஒரு குழந்தை போல கடைசி வரை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்றேன். அவர் ஏற்றுக்கொண்டார்.
எனக்கு ஏற்றவர் பகத் பாஸில் தான். அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.