விரைவில்...நயன் - விக்கி திருமண வீடியோ - களத்தில் இறங்கிய கெளதம் மேனன்?
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி ஒரு மாதம் கடந்த நிலையில் இன்னும் வீடியோ வெளியாகவில்லை.
நயன் - விக்கி
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பல்வேறு கட்டுப்பாடுகள் உடனும், பிரம்மாண்டமாகவும் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஏனெனில் இவர்களது திருமண நிகழ்வை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது. மேலும் நயன் - விக்கியின் திருமண செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் செய்ததாக கூறப்பட்டது.
நெட்பிளிக்ஸ்
அதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது திருமண வீடியோவை வெளியிடாத கோபத்தில் அவர் அவ்வாறு செய்ததாக கூறப்பட்டது.
இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிடும் முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், நெட்பிளிக்ஸ் நிறுவனம் விக்கி நயன் ஜோடியின் போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
கெளதம் மேனன்
மேலும், திருமண வீடியோவை ஒரே தொகுப்பாக வெளியிடாமல், வெப் சீரிஸ் போல், மெஹந்தி நிகழ்வு தனியாகவும், சங்கீத் நிகழ்வு தனியாகவும், திருமண நிகழ்வு தனியாகவும், திருமணத்துக்கு பிந்தைய நிகழ்வு தனியாகவும் என தனித்தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்,
இதற்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு இயக்குனர் கெளதம் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாஜ் சமுத்திராவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி! எச்சரிக்கையை புறக்கணித்த தேசியப் புலனாய்வு IBC Tamil
