நட்சத்திர கொண்டாட்டமாக அரங்கேறிய நயன்-விக்கி திருமணம்... வெளியான அன்சீன் புகைப்படங்கள்!

Nayanthara Vignesh Shivan Marriage Viral Photos
By Sumathi Jul 10, 2022 05:20 AM GMT
Report

கடந்த மாதம் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்தான புகைப்படங்கள் ஒரு மாதம் கழித்து தற்போது அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

 பாலிவுட் முதல் கோலிவுட்

7 ஆண்டு காதல் பந்தத்தில் இருந்த நயன் -விக்கி மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மணவறையில் கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

nayanthara

இந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரையிலான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட னர். நயன்தாரா இதுவரை முன்னணி நாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்திரு விட்டார்.

கோலாகலம்

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்துமொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த இவரின் திருமணத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்திருந்தன. சூப்பர் ஸ்டார் தாலி எடுத்து கொடுக்க பிரபலங்களின் வாழ்த்துக்களுடன் நடைபெற்றது இத்திருமணம்.

vijay sethupathi

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா வருகை தந்து வாழ்த்தி இருந்தனர். சூர்யாவும், நயன்தாராவும் ஆதவன், மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

நட்சத்திர கொண்டாட்டம்

விஜய் சேதுபதியின் மனைவி ஜெசியுடன் தம்பதிகளாக வந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். முன்னதாக நயன் -விக்கி காதல் மலர காரணமான நானும் ரவுடி தான் படத்திலும் சமீபத்தில் வெளியான

rajinikanth

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் இணைந்திருந்தனர். கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் கலகலப்பான நிகழ்வு பல நடைபெற்றது.

நயன்-விக்கி

எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, ஷாருக்கான், இயக்குனர் அட்லி என பலர் கலந்துகொண்டனர்.

sharukhan

தற்போது, பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அட்லீ இயக்குகிறார்.  

நாட்டின் முதல் திருநம்பி விமானி... விமானம் ஓட்ட தடை! ஏன் இந்த நிலை?