அந்த பிரபல நடிகையால் விக்னேஷிடம் சண்டைபோட்ட நயன்தாரா...? - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Nayanthara Samantha Vignesh Shivan
By Nandhini Jul 27, 2022 10:38 AM GMT
Report

நயன் - விக்கி திருமணம்

7 ஆண்டுகளாக காதலித்த வந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 9-ம் தேதி சென்னை, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 

ஹனிமூன்

திருமணம் முடிந்த பிறகு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். தேனிலவுக்கு சென்ற புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வந்தது.

Nayanthara - Vignesh Shivan

வேலையில் பிசியான நயன் - விக்கி

தேனிலவு முடித்து விட்டு, இந்தியாவிற்கு இருவரும் திரும்பி வந்ததும் அவரவர் வேலைகளில் மிகவும் பிசியாகிவிட்டனர்.

தற்போது, நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். முதன்முதலாக இப்படம் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

விக்னேஷ் சிவனும் அடுத்து இயக்க உள்ள ‘ஏகே 62’ படத்துக்கான பணிகளில் படுபிசியாகி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.

விக்கி - நயன் ஜோடி சண்டை

இந்நிலையில், திருமணமான சிறிது மாதங்களிலேயே விக்னேஷுடன், நயன்தாரா சண்டைபோட்டதாக தற்போது சமூகவலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘ஏகே 62’ படத்தில் ஹீரோயினாக நடிகை சமந்தாவை தேர்வு செய்து சிபாரிசு செய்துள்ளாராம். இதை அறிந்த நயன்தாரா, நான் இருக்கும்போது சமந்தாவின் பெயரை நீ எப்படி சொல்லலாம் என்று கணவர் விக்னேஷிடம் சண்டையிட்டுள்ளாராம்.

தற்போது இத்தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவவே, என்ன இது.. கல்யாணம் முடிந்து 6 மாதம் கூட ஆகல... அதுக்குள்ள சண்டையா... என்று அதிர்ச்சியில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Nayanthara - Vignesh Shivan