நயன்தாரா என்ற பெயருக்கு தமிழில் அர்த்தம் என்னென்னு தெரியுமா - கவிஞரின் பதிவு - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Nayanthara Vignesh Shivan
By Nandhini Jun 21, 2022 01:01 PM GMT
Report

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

நயன்தாரா என்ற பெயருக்கு தமிழில் அர்த்தம் என்னென்னு தெரியுமா - கவிஞரின் பதிவு - ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan

தாய்லாந்தில் ஹனிமூன்

ஹனிமூனுக்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள  பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் தங்கியுள்ளனர். சில நாட்கள் அங்கிருந்துவிட்டு இருவரும் திரும்பி வந்து தங்களது திரைப் பயணத்தில் பிஸியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நயன்தாராவின் தமிழ் பெயர்

இந்நிலையில், நயன்தாராவின் தமிழ் பெயரை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ஒருவர்.

கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு இவரது முகநூல் பதிவு ஒன்றில் நயந்தாரா என்ற பெயருக்கு தமிழ் பெயர் உடுக்கண்ணி என்று கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் - 

"நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரிய தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண். தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரிய தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன். விண்மீன் என்பதும்கூட கவிதைப் பண்புள்ள உருவகப் பெயர்தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்த போது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது. நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்." என்று பதிவிட்டுள்ளார். 

இந்த பதிவைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துள்ளனர். தற்போது இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

நயன்தாரா என்ற பெயருக்கு தமிழில் அர்த்தம் என்னென்னு தெரியுமா - கவிஞரின் பதிவு - ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan