நயன்தாராவோடு பயங்கர ரொமான்ஸ்... - புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் - வாயடைத்த ரசிகர்கள்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
தாய்லாந்தில் ஹனிமூன்
தாய்லாந்தில் உள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தாய்லாந்தில் இருவரும் இருப்பார்கள் என்றும், திரும்பி வந்ததும் தங்களது திரைப் பயணத்தில் பிஸியாகி விடுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்னேஷ் வெளியிட்ட புகைப்படம்
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், நயன்தாராவின் முகத்தோடு முகம் வைத்து பயங்கர ரொமான்ஸ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் Nala pathukonga sir enga Nayanthara va!!???♀️✨God bless you both!!என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.