திருமணத்தால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..!

Nayanthara Vignesh Shivan Marriage
By Thahir Jun 16, 2022 10:21 PM GMT
Report

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் மனித உறிமைகள் மீறப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.இவர் ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தார்.

திருமணம்

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் மூலம் காதல் மலர்ந்தது.

திருமணத்தால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Trouble Due To Marriage Vignesh Sivan

இதையடுத்து 7 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.பல இடங்களுக்கு காதலாராக சென்று வந்த இவர்களின் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Trouble Due To Marriage Vignesh Sivan

இவர்களின் திருமணத்தில் ஷாருக்கான்,ரஜினி,அட்லி,சூர்யா, போனிகபூர்,அனிருத் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புகார் 

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்ற நயன்தாரா திருப்பதி மாட வீதிகளில் கணவருடன் போட்டோ ஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் காலணியுடன் இருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருமணத்தால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்..! | Nayanthara Trouble Due To Marriage Vignesh Sivan

திருப்பதி தேவஸ்தானம் நயன்தாரா செயலை கண்டித்தது. அவருக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரித்தது. நடந்த சம்பவத்துக்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய புகார் ஒன்று எழுந்துள்ளது.மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடற்கரை பொது இடம். அங்கு நயன்தாரா திருமணம் நடந்த நாளில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.