விக்னேஷ் சிவனின் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்ட நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 9-ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
நயன்தாரா அறிமுகம்
2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் இந்த நயன்தாரா. இவரை சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர்.
சினிமாவில் இவர் தொடர்பான வதந்திகள் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாத அவர்,தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தினார்.
திருமணம்
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த்,ஷாருக்கான்,அட்லி,உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது.
திருமணத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன் திருணமத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருந்தார்.
கணவர் கையை இறுக்கி பிடித்துக்கொண்ட நயன்தாரா
இதையடுத்து நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர் விக்னேஷ் சிவன்,நயன்தாரா ஜோடி கழுத்தில் தாலியுடன் மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவை முதன் முதலில் இந்த நட்சத்திர விடுதியில் தான் சந்தித்து கதையை கூறினேன் என்று தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் கையை விடாமல் பிடித்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் இருவருக்கும் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
யார் இந்த நயன்தாரா?காதல் முதல் திருமணம் வரை - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி