அம்பானி வாரிசுடன் கைகோர்க்கும் நயன்தாரா - என்ன தொழில்?

Nayanthara Skin Care Tamil Actress Isha Ambani
By Karthikraja Nov 01, 2024 11:29 AM GMT
Report

இஷா அம்பானியுடன் நடிகை நயன்தார தொழிலில் கைகோர்த்துள்ளார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நடிப்பில் மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார்.

nayanthara

லிப் பாம், நாப்கின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதோடு 9Skin என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார்.

மொத்தமாக மாறிய நயன்தாரா..பிசினஸ் கூட விக்னேஷ் சிவன் கையில் இல்லை - இவரே கவனிக்கிறார்?

மொத்தமாக மாறிய நயன்தாரா..பிசினஸ் கூட விக்னேஷ் சிவன் கையில் இல்லை - இவரே கவனிக்கிறார்?

இஷா அம்பானி

தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் ஒப்பந்தமாக செய்திருப்பதாக கூறப்படுகிறது.

nayathara 9skin tira

இனி 9Skin நிறுவனத்தின் தயாரிப்புகளை இஷா அம்பானி நடத்தி வரும் Tira இணையதளம் மற்றும் ரீடெய்ல் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9Skin நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள “Skinderella” Hydrogel Mask என்னும் தயாரிப்பு Tira வில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவான் திரைப்படத்தில் நடிக்கும்போது நயன்தாராவிற்கு இஷா அம்பானியுடன் நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு தற்போது தொழில் ரீதியாக வளர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.