நன்றியுடன் நினைவில் கொள்வேன் - பட்டியலில் தனுஷை தவிர்த்த நயன்தாரா

Dhanush Nayanthara Netflix Tamil Actress Tamil Producers
By Karthikraja Nov 20, 2024 12:47 PM GMT
Report

ஆவண படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு நயன்தாரா தெரிவித்துள்ளார். 

நயன்தாரா ஆவண படம்

நயன்தார - விக்னேஷ் சிவன் தொடர்பான 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த 18.11.2024 அன்று வெளியானது. 

Nayanthara: Beyond the Fairy Tale

இந்த படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் உள்ள 3 வினாடி காட்சிகளை பயன்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

150 நடிகைகளுக்கு தொல்லை; அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை - தனுஷை விளாசும் சுசித்ரா

150 நடிகைகளுக்கு தொல்லை; அம்மா நடிகைகளை கூட விட்டு வைக்கவில்லை - தனுஷை விளாசும் சுசித்ரா

தயாரிப்பாளர்களுக்கு நன்றி

நயன்தாராவின் அறிக்கை தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாராவிற்கு ஆதரவாகவும், தனுஷிற்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

தற்போது தனது ஆவணப் படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

nayantha thanks

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது 'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது.

தனுஷை தவிர்த்த நயன்தாரா

அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது. எந்தவித தயக்கமோ தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில், பாலிவுட் திரையுலகில் ஷாருக்கான், தமிழ் திரையுலகில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட்ஸ், லைக்கா புரொடக்சன்ஸ், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், சிவாஜி புரொடக்சன்ஸ் என பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் நானும் ரவுடி தான் படத்தை தயாரித்த தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தடையில்லா சான்றிதழ் தராத நிலையில் தனுஷ் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தவிர்த்துள்ளார்.