காணாமல் போன நயன்தாரா.. பூதாகரமான விவகாரம் - தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை
நயன்தாரா இருப்பிடம் குறித்து தெரியவில்லை என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
வாடகைத் தாய்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். என திடீரென தெரிவித்திருந்தார்.

ஜூன் மாதம் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பியவாறு இருந்தனர். அதன்பின் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது.
பதிவு திருமணம்
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவபணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஒரு வாரத்தில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இதற்கிடையில் நயன் - விக்கி 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தது, பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள், கடந்த டிசம்பர் மாதம் வாடகைத்தாய் முறையில் ஒப்பந்த பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் அளித்ததாகவும் தகவல் வெளியானது.
நயன் எங்கே?
இந்நிலையில், தற்போது வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக நயன்-விக்கியிடம் இன்னும் விசாரணை நடைபெறவில்லை என சுகாதரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், நயன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனவும், தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜவான் பட படப்பிடிப்புக்காக நயன் ஹைதராபாத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil