நயன்-விக்கியின் வெளிநாட்டு அட்ராசிட்டிஸ் - ஒரு நாளுக்கு இவ்வளவு செலவா?
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஸ்பெயினில் செய்யும் ஒரு நாள் செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நயன்-விக்கி
நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள்.
அங்கு இருந்து நயன்தாராவின் புகைப்படங்கள், வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹனிமூனுக்காக ஸ்பெயினுக்கு சென்றிருக்கிறார்கள்.
ஹனிமூன்
விமானத்தில் ஏறியதில் இருந்தே புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். நயன்தாரா நடப்பது, சிரிப்பது, ரிலாக்ஸ் செய்வது என்று அவரை வளைத்து, வளைத்து ரசித்து புகைப்படங்கள் எடுத்து ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் விக்கி.
தங்களின் திருமண வீடியோவை நெட்ஃப்ளிக்ஸுக்கு ரூ. 25 கோடிக்கு விற்றுவிட்டார் நயன்தாரா. இதனையடுத்து, இவர்கள் தற்போது தங்கியுள்ள நட்சத்திர விடுதியில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் மேலும் அங்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் தனி செலவு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஒரு நாள் செலவு?
ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பிரபல நிறுவத்தின் ஸ்பான்சர் காரணமாகத்தான் வெளிநாடு சென்றுள்ளனர். மேலும் அங்கு செலவு செய்யும் ஒவ்வொரு செலவும் அந்த நிறுவனமே பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்.
நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எந்த ஒரு செலவும் இல்லை எனவும் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலிருந்து அடுத்து மற்றொரு வெளிநாடு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.