அந்த 3 குரங்குகள் என்னை வைத்து சம்பாரிச்சு.. இதுதான் தெரியும் - விளாசிய நயன்தாரா!
நடிகை நயந்தாரா அண்மையில் அளித்த பேட்டியில் பேசியது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. திருமணம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டாலும், கேரியரில் டாப்பிலேயே இருந்து வருகிறார். அசுரவளர்ச்சி என்றே கூறலாம். பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து, சர்ச்சைகளை கடந்து தற்போது லேடி சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.
இவர் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை Nayanthara: Beyond the Fairytale என்ற பெயரில் ஆவணப்படமாக அண்மையில் வெளியானது.
நயன்தாரா அப்போது தான் தனுஷ் பற்றி பெரிய குற்றச்சாட்டு முன்வைத்தார். தனுஷ் மற்றும் நயன்தாராவின் பிரச்சனைக்கு கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நயன்தாரா சமீபத்தில் ஹிந்தியில் ஒரு youtube சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.
3 குரங்குகள்
அதில் அவர் பேசியதாவது, நான் என்னுடைய திருமணத்தை பணமாக்க நினைத்ததாக பலர் கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் காதல் மலர்ந்த தருணத்தையும், வாழ்க்கையில் உன்னத தருணத்தையும் நினைவு கூறவே இந்த ஆவணப் படத்தை எடுக்க நினைத்தேன்.
அதையும் சிலர் விமர்சித்தார்கள். நான் தனுஷுடன் பேசுவதற்கு பல முயற்சிகள் எடுத்தேன். ஆனால் அது சரியாக அமையவில்லை. நான் தப்பு செய்யாததால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
எங்களின் விளம்பரத்திற்காக ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயரைக் கெடுக்கும் அளவிற்கு நாங்கள் செல்லவில்லை. அப்படி செய்திருந்தால் மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டார்கள். அதோடு தன்னை பற்றி வதந்தி பரப்பும் யூடியூபர்கள் குறித்தும் நயன்தாரா பேசி இருக்கிறார்.
அதில், ஒரு மூன்று பேர் குழு இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். அவர்களின் 50 வீடியோக்களில் 45 வீடியோக்கள் என்னை பற்றி தான் பேசி இருப்பார்கள். நான் அவர்களை மூன்று வகையான குரங்காக தான் பார்க்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.