நான் ஒருத்திதான் காதலித்தேனா..என்னை மட்டும் கேட்குறீங்க? முந்தைய காதல் பற்றி நயன்தாரா!

Nayanthara Tamil Cinema Netflix
By Swetha Nov 18, 2024 08:30 AM GMT
Report

முந்தைய ரிலேஷன்ஷிப் குறித்து முன்னணி நடிகையான நயன்தாரா மனம் திறந்துள்ளார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட திருமண நிகழ்வுடன் சேர்த்து,

நான் ஒருத்திதான் காதலித்தேனா..என்னை மட்டும் கேட்குறீங்க? முந்தைய காதல் பற்றி நயன்தாரா! | Nayanthara Talks About Her Previous Relationship

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை Nayanthara: Beyond the Fairytale என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது. தனது முந்தைய காதல் குறித்து எங்கும் பேசாத நயன்தாரா முதல்முறை ஆவணப்படத்தில் அது குறித்து பேசியுள்ளார்.

அதில், "எனது முதல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் இருந்தது. நம்பிக்கை மட்டும்தான் இருவருக்குமிடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும்.

நம் காதலரும் நம்மை முழுமையாக காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். 100 சதவீதம் நாமும் காதலிக்க வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். என்னுடைய முந்தைய ரிலேஷன்ஷிப் பற்றி இதுவரை நான் எங்குமே பேசியதில்லை.

இது கீழ்தரமான செயல் - தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை .. நயன்தாரா காட்டம்!

இது கீழ்தரமான செயல் - தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை .. நயன்தாரா காட்டம்!

முந்தைய காதல்

ஆனால், எல்லோரும் நிறைய விஷயங்களை அவர்களே நினைத்துக்கொள்கிறார்கள். எந்தக் கதையை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்தக் கதைகள் எல்லாம் மோசம். என்னுடைய மனதை காயப்படுத்திய விஷயம் என்னவென்றால்,

நான் ஒருத்திதான் காதலித்தேனா..என்னை மட்டும் கேட்குறீங்க? முந்தைய காதல் பற்றி நயன்தாரா! | Nayanthara Talks About Her Previous Relationship

என்னைப்பற்றிய கதையை என்ன, ஏது என்றுகூட விசாரிக்காமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக்கொண்டதுதான். இன்றுவரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களை ஒருத்தர்கூட கேள்வி கேட்கவில்லை.

சம்பந்தப்பட்ட ஆண்களிடம் சென்று, 'நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது?' என்று கேட்டதே இல்லை. எப்போதும் ஒரு பெண்ணை மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள். இது நியாயமே இல்லை.

என்னைக் கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரையும் கேள்வி கேட்க வேண்டும்தானே.நான் ஒருத்தி மட்டும் தான் இங்கே ரிலேஷன்ஷிப்பில் இருந்துருக்கிறேனா அல்லது நான் ஒருத்தி மட்டும் காதல் செய்துள்ளேனா. இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை." என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.