ரஜினிகாந்த் பெரிய நடிகர் என்று தெரியாது - நயன்தாரா பேச்சால் கொதிக்கும் ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த் குறித்து நயன்தாரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா
நடிகை நயன்தாரா சினிமாவில் அறிமுகமாகும் போதே முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம் ஆகியோரின் படங்களில் நாடித்திருந்தார்.
தமிழில் தனது முதல் படமான ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த அவர், 2வது படத்திலே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரஜினிகாந்த்
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து குறித்து பேசியிருந்தார்.
இதில் பேசிய அவர், "சந்திரமுகி படத்தில் முதல் காட்சி எனக்கு ரஜினி சாருடன்தான் இருந்தது. அப்போது அவர் இவ்வளவு பெரிய நடிகர் என்பது தெரியாது. ஆனால் அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஒருவேளை எனக்கு முன்பே தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
நயன்தாராவின் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கோவத்தை ஏற்பத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ரஜினிகாந்திற்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் நயன்தாராவிற்கு தெரியாது என சொல்வது நம்பும்படியாக இல்லை என விமர்சித்து வருகின்றனர்.