விக்னேஷ் சிவனுடன் விவாகரத்து; வதந்தி என்ற ரசிகர்கள் - ஆனால், நயன் செய்த சம்பவம்!
நடிகை நயன்தாரா பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி ஒன்று படு வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆன் குழந்தைகள் உள்ளனர்.
விவாகரத்து?
திருமணத்திற்கு பின்பும் நயன் கெரியரில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பிஸ்னஸிலும் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாகவும் விரைவில் இரண்டு பேரும் பிரியவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதன்பின் விக்னேஷ் தனது இன்ஸ்டாவில் நயன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
தற்போது, நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "உம்.. நான் இழந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, கணவரை பிரியப்போகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.