10 கோடி தந்தாலும் அந்த 50 வயசு நடிகர் வேண்டாம் - பெயரை கேட்டதுமே எஸ்கேப்பான நயன்தாரா

Nayanthara Tamil Cinema Prabhas
By Karthick Apr 30, 2024 08:08 PM GMT
Report

நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகின்றார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவின் உச்ச நாயகியாக இருக்கின்றார் நயன்தாரா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நயன்தாரா, பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக உள்ளார்.

nayanthara in red saree

சில காலங்கள் நயன்தாரா, சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் இருந்து விலகிய நிலையிலும், அவருக்கு மாபெரும் ரீ-என்ட்ரியாக அமைந்த படமாக மாறியது "கோலமாவு கோகிலா". பலரின் பாராட்டுகளை பெற்ற இபபடம் வெளியானதை தொடர்ந்து மீண்டும் ரஜினி, விஜய், அஜித் என ஒரு ரவுண்ட் வருகிறார் நயன்தாரா.

nayanthara yellow saree

தற்போது நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வரும் அவர், சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார். தற்போது தொடர்ந்து திரிஷா படங்களில் கமிட்டாகி வரும் நிலையில், நயன்தாரா பட அறிவிப்புகள் பெரிதாக வெளியாகவில்லை.

இது வரை இல்லாத கவர்ச்சி - விருது விழாவில் அசத்திய நயன்தாரா - வீடியோ இதோ

இது வரை இல்லாத கவர்ச்சி - விருது விழாவில் அசத்திய நயன்தாரா - வீடியோ இதோ

எஸ்கேப்

பான் இந்தியன் படமாக உருவாகும் பக்த கண்ணப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படியாக கொண்ட "கண்ணப்பா" படத்தில் சிவனாக பிரபாஸ் நடிக்க கமிட்டானார். அவருக்கு ஜோடியாக பார்வதியாக நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமானதாக கூறப்பட்டது.

smiling nayanthara

அது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை என்றாலும், படத்தயாரிப்பு நிறுவனம் அதனை மறுக்கவில்லை. 16 வருடங்களுக்கு பிறகு பிரபாஸுடன் நயன்தாரா நடிக்கிறார் என எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், அப்படத்தில் இருந்து சைலெண்டாக நயன்தாரா விலகியதாக கூறப்படுகிறது.

nayanthara yellow saree

படத்தில் பிரபாஸ் நடிப்பதற்கு பதிலாக பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிப்பது உறுதியானது. அதன் பிறகு தான் நயன்தாரா விலகினார் என்றும் தற்போது தகவல் வெளிவருகிறது. உண்மையில் நயன்தாரா படத்தில் நடிக்க கமிட்டானரா? என்பதே இன்னும் தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.