50 செகண்டுக்கு 5 கோடி - இதுதான் டாப் - அந்த தமிழ் நடிகை யார் தெரியுமா?
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவருக்கு ஒரு படத்துக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார்.
அதிக சம்பளம்
தொடர்ந்து காஸ்மெட்டிக்ஸ் பிஸ்னஸையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்தியளவில் எந்த நடிகையும் வாங்காத சம்பளமாக 50 விநாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவரது திருமண ஆவணப்படம் மூலம் ரூ.25 கோடி சம்பாதித்தார்.
சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார். நயன்தாராவுக்கு, விக்னேஷ் சிவனுடன் திருமணமாகி இரட்டை ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.