சூப்பர் சிங்கரில் சொன்னது என்னவோ 50 லட்சம் வீடுதான்; ஆனால் கிடைத்தது..செந்தில் கணேஷ் ராஜலட்சுமி
சூப்பர் சிங்கரில் கிடைத்த வீடு குறித்து செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தகவல் பகிர்ந்துள்ளனர்.
செந்தில்-ராஜலட்சுமி
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதில் டைட்டில் ஜெயிப்பவர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையில் வீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டை உடனே அவர்களால் பெற முடியவில்லை என்று தகவல்கள் வலம் வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள டைட்டில் வென்ற ராஜலட்சுமி செந்தில்- கணேஷ் தம்பதி, நாங்கள் 8வது சீசனில் டைட்டில் வெற்றி பெற்ற போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு எங்களுக்காக கிடைப்பதாக சொன்னார்கள். ஆனால் அதற்கு 18% வரி கட்ட வேண்டும்.
பரிசாக கிடைத்த வீடு
அப்படி பார்க்கையில் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் அளவிற்கு வரி கட்ட வேண்டும். ஆனால் எங்களிடம் இரண்டு ஆப்ஷன் சொன்னார்கள். ஒன்று நீங்கள் 15 லட்சம் கட்டி 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிக் கொள்வது. இல்லை என்றால் அந்த 15 லட்சம் குறைத்து 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.
எங்களுக்கு கிராமத்தில் வீடு இருக்கிறது அதுபோல சென்னையில் எங்களுக்கு சிட்டியில் பெரியதாக வேலை இருக்காது. அதனால் உக்கரம் பகுதியில் அவர்கள் எங்களுக்கு வீடு தருகிறோம் என்றதும் நாங்கள் எங்களுக்கு வரி பணம் 15 லட்சத்தை குறைத்து 35 லட்சம் மதிப்புள்ள வீடு போதும் என்று சொல்லிவிட்டோம்.
அதனால் எங்களுக்கு சூப்பர் சிங்கரில் இருந்து 35 லட்சம் மதிப்புள்ள வீட்டை பத்திரப்பதிவு செய்து எங்களிடம் கொடுத்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.