அவ்வளவு ரணகலத்துலயும்.. நயன்தாராவின் தீராத ஆசை!
நயன் - விக்கி ஜோடி தங்களது திருமணத்தை சிங்கப்பூரில் தான் நடத்த ஆசைப்பட்டார்களாம்..
நயன் - விக்கி
தமிழ் சினிமாவின் பிரபலமான காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய்சேதுபதி, ஷாலினி, சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் விலைக்கு வாங்கியிருந்தது. இதற்காக 25 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தாங்கள் அம்மா அப்பாவாக ஆகிவிட்டதாக விக்னேஷ் சிவன் ட்விட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்தார்.
திருமண ஆசை
அதில் வெடித்த குழப்பங்கள், சர்ச்சை இன்றும் முடிந்த பாடில்லை. வாடகைத்தாய் விவகாரம் பூதாகரமாக எழுந்தது. இவர்கள் 6 வருடத்திற்கு முன்பே திருமணம் செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், அவர்களது தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

இவ்வாறு இந்த ஜோடி தங்களை ஹாட் டாப்பிக்கில் நீட்டித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் திருமணம் நடத்துவதற்கு முன் இந்த ஜோடி, சிங்கப்பூரில் திருமணம் நடத்த ஆசைப்பட்டு அதுகுறித்து யோசித்தார்களாம். நடைமுறைக்கு அந்த திட்டம் ஒத்துவராததால் அந்த முடிவை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil