நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது காவல் நிலையத்தில் புகார்...விரைவில் கைது?
நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் மீது வழக்கறிஞர் சார்லஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞர் புகார்
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது.
பிரபல ஜோடிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சமீபத்தில் 2022ம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்,

பின்னர் 2022ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி இரட்டை குழந்தைகளைப் பெற்றதாக இந்த ஜோடி அறிவித்தது. 2022 ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2022 அக்டோபரில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளதாக அறிவித்ததால், இருவரும் பிரபலங்கள் என்பதால், இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாடகைத் தாய் மற்றும் இட்பிஸ் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசு வகுத்துள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக இதனை அவர்கள் செய்துள்ளனர்.
கடும் நடவடிக்கை தேவை
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் பொதுவானது, எனவே இது சமூகத்திற்கு எதிரான கடுமையான குற்றமாகும். மேலும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்க இளம் தலைமுறையினரைத் தூண்டியுள்ளது.

மக்கள் மத்தியில் சட்ட விரோதமாக வாடகைத் தாய் முறையை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் செயல்பாடு அமைந்துள்ளது.
எனவே இதனுடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவில் வாடகைத்தாய் தொடர்பான சட்டவிதிமுறைகள் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil