நயன் உடல்நிலை பாதிப்பிற்கு பின் திடீரென வெளிநாடு பறந்த ஜோடி.. எங்கே?

Nayanthara Only Kollywood Vignesh Shivan Gossip Today
By Sumathi 3 மாதங்கள் முன்

விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின் நயன்தாராவுடன் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன் - விக்கி

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன் ஜோடி ஹனி மூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு சுமார் ஒரு வாரங்கள் தங்களுடைய ஹனி மூனை செலிபிரேட் செய்து விட்டு நாடு திரும்பி, மீண்டும் தங்களுடைய வேலைகளில் பிஸியாகினர்.

நயன் உடல்நிலை பாதிப்பிற்கு பின் திடீரென வெளிநாடு  பறந்த ஜோடி.. எங்கே? | Nayan And Vignesh Shivan Suddenly Go To Spain

தொடர்ந்து, அந்த வகையில் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வந்த 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்தார்.

 வெளிநாடு பயணம்

இதற்காக அவரை பலரும் மனதார பாராட்டினர். இந்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு திடீர் என உணவு ஒவ்வாமை காரணமாக, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், இதனை நயன்தாரா தரப்பு மறுத்திருந்தது.

நயன் உடல்நிலை பாதிப்பிற்கு பின் திடீரென வெளிநாடு  பறந்த ஜோடி.. எங்கே? | Nayan And Vignesh Shivan Suddenly Go To Spain

அதனையடுத்து, தற்போது நயன்தாரா - விக்கி ஜோடி மீண்டும் தங்களுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளனர். இந்த தகவல் வெளியாகிய நிலையில் மீண்டும் இருவரும் ஹனி மூன் சென்றுள்ளார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.