நடிகை நயன்தாரா கர்ப்பம்? மருத்துமனையில் நயன்தாரா - ரசிகர்கள் கமெண்ட்ஸ்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir 3 மாதங்கள் முன்

நடிகை நயன்தாரா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அறிமுகம்

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார். 

Nayanthara

காதல் திருமணம்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

Nayanthara Marriage

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூன்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்றனர். பின்பு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.

பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் திரைப்பட வேலைகளில் பிசியாகின. நயன்தாரா ஜவான் திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பை சென்ற நிலையில் சென்னை திரும்பினார்.

நயன்தாரா கர்ப்பம்?

இந்த நிலையில் சென்னையில் தங்கள் வீட்டில் விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்ட நயன்தாராவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Vignesh Shivan

பின்பு சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்பியுள்ளதாக பிரபல தமிழ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் பலரும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகை நயன்தாரா கர்ப்பம்? மருத்துமனையில் நயன்தாரா -  ரசிகர்கள் கமெண்ட்ஸ் | Nayanthara Pregnant Nayanthara At The Hospital