பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி - சத்தீஸ்கரில் பரபரப்பு!

India Chhattisgarh Indian Army
By Vidhya Senthil Sep 04, 2024 10:14 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார், ​​தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியானது .இந்தத் தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி - சத்தீஸ்கரில் பரபரப்பு! | Naxalites Killed In Encounter In Chhattisgarh

அப்போது, இன்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கு இடையே  துப்பாக்கி சூடு நடந்தது.அதில், ஒன்பது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் சட்டசபை நோக்கி நிர்வாணமாக ஓடிய ஆண்கள்; ஓட்டம் பிடித்த பெண்கள் - பெரும் பரபரப்பு!

சத்தீஸ்கர் சட்டசபை நோக்கி நிர்வாணமாக ஓடிய ஆண்கள்; ஓட்டம் பிடித்த பெண்கள் - பெரும் பரபரப்பு!

 துப்பாக்கி சூடு  

மேலும், நக்சலைட்டுகளுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . தொடர்ந்து நக்சல்களிடம் இருந்து ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி - சத்தீஸ்கரில் பரபரப்பு! | Naxalites Killed In Encounter In Chhattisgarh

அப்பகுதியில், இன்னும் பிற நக்சலைட்டுகள் இருக்கிறார்களா என்று பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.