சத்தீஸ்கர் சட்டசபை நோக்கி நிர்வாணமாக ஓடிய ஆண்கள்; ஓட்டம் பிடித்த பெண்கள் - பெரும் பரபரப்பு!
சத்தீஸ்கர் மாநில சட்ட சபையை நோக்கி நிர்வாணமாக ஒடிய நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கவனம் ஈர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுப் பணிகளில் எஸ்.சி.எஸ்.டி பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி போலியாக எஸ்.சி.எஸ்.டி சான்றிதழ்களைப் பெற்று 267 அரசுப் பணி நியமனம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட எஸ்.சி.எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதற்கு உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பாதிக்கப்பட்ட நபர்கள் 12 பேர் அரசின் கனத்தை ஈர்ப்பதற்காக நிர்வாணமாக சட்ட சபை நோக்கி ஓடிவந்தனர்.
போலீசார் வழக்கு பதிவு
இதைக்கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். நிர்வாணமாக ஓடிய நபர்களை கண்டு அவ்வழியாக சென்ற ஆண்களும் பெண்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.