மனைவி, மகளை தாக்கிய கெளதம் சிங்கானியா; காப்பாற்றிய நீதா அம்பானி, ரூ.1500 கோடி சரிவு - பின்னணி!

Mumbai
By Sumathi Nov 23, 2023 06:54 AM GMT
Report

ரேமண்ட் குழும தலைவர் கௌதம் சிங்கானியா மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார்.

கௌதம் சிங்கானியா

தீபாவளி பண்டிகையின் போது நடந்த பார்ட்டியில் கௌதம் சிங்கானியா, மனைவி நவாஸ் மோடியை வீட்டுக்குள் அனுமதிக்காததால் அவர் சாலையில் உட்கார்ந்த போட்டோ, வீடியோ படு வைரலானது.

nita-ambani rescue nawaz-modi

அதற்கு முன்னதாக, கௌதம் சிங்கானியா தன்னையும், தன்னுடைய குழந்தையையும் தாக்கியதை அடுத்து நீதா அம்பானியும், ஆனந்த் அம்பானியும் தான் தன்னை காப்பாற்ற வந்ததாக கூறியுள்ளார்.

ரூ.1500 கோடி இழப்பு

இந்நிலையில், ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கௌதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியா உடன் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். 32 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களுக்கு நிஹாரிகா மற்றும் நிசா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

nawaz-modi-assault-by-gautam-singhania

இதனால், நவாஸ் மோடி தனக்கும் தன் பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்காகவும் கெளதம் சிங்கானியா-வின் 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் 75 சதவீத தொகையை கேட்டுள்ளார். இதற்கு டிரஸ்ட் வடிவில் சொத்துக்களை அனுபவிக்க கௌதம் சிங்கானியா ஒப்புதல் அளித்துள்ளார்.

நீதா அம்பானி 60வது பிறந்தநாள்; அடேங்கப்பா..முகேஷ் அம்பானி கொடுத்த கிஃப்ட் என்னனு தெரியுமா?

நீதா அம்பானி 60வது பிறந்தநாள்; அடேங்கப்பா..முகேஷ் அம்பானி கொடுத்த கிஃப்ட் என்னனு தெரியுமா?

ஆனால், மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பிரிவை அறிவித்த நாள் முதல் ரேமண்ட் பங்குகள் சுமார் 12 சதவீதம் சரிந்து சந்தை மூலதன மதிப்பீட்டில் சுமார் ரூ.1500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகப்படியாக 4.4 சதவீதம் வரையில் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.