முருகன் கோயில் மலையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட எம்.பி - வெடிக்கும் சர்ச்சை!
திருப்பரங்குன்றம் மலையின் மீது நவாஸ் கனி எம்பி பிரியானி சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியாணியால் சர்ச்சை
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மலை படிக்கட்டில் ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்புபோர்டு வாரிய தலைவருமான நவாஸ் கனியுடன் வந்தவர்கள், பிரியாணி சாப்பிட்டனர் என சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக அங்குள்ள தர்காவில் ஆடு வெட்ட முயன்றதை, போலீசார் தடுத்தனர். வழிபடத் தடையில்லை. உயிர்பலி கொடுக்கத்தான் தடை என அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில் எம்.பியின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில்,
ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.