இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; ஒருவர் பலி - 24 குடும்பங்களின் நிலை என்ன?
மும்பையில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூன்று மாடி கட்டிடம்
மஹாராஷ்டிராவில் கன மழை பெய்து வரும் நிலையில் நவி மும்பையில் ஷாபாஸ் கிராமத்தில் உள்ள சிபிடி பெலாப்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம் இன்று (27.07.2024) அதிகாலை இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணி
அந்த கட்டிடத்தில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தில் இருந்த 13 குழந்தைகள் உள்பட 52 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், கட்டட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியிருப்பது தெரிய வந்தது.
அவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உள்ளே சிக்கியுள்ள இருவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நிலையில், அவர்களால் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இடிந்த கட்டடம் 10 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. மீட்புப் பணிகள் துரித நிலையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் உள்ளே சிக்கியுள்ள இருவரையும் மீட்டிடுவோம் என நவி மும்பை மாநகராட்சி ஆணையர் கைலாஸ் ஷிண்டே தெரிவித்துள்ளார்.