வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசா..? நவீன் பட்நாயக் பரபரப்பு விளக்கம்!

Biju Janata Dal India Odisha Lok Sabha Election 2024
By Jiyath Jun 08, 2024 12:17 PM GMT
Report

வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது என ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பரட்நாயக் தெரிவித்துள்ளார்.  

நவீன் பட்நாயக்

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இந்த 2 தேர்தல்களிலும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 24 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநில முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வி அடைந்தது.

வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசா..? நவீன் பட்நாயக் பரபரப்பு விளக்கம்! | Naveen Patnaik First Reaction After Odisha Defeat

ஒடிசாவில் பாஜக அபார வெற்றி பெற்றது. இதனிடையே அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நவீன் பட்நாயக் "வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. எனது அரசியல் வாரிசை ஒடிசா மக்கள் முடிவு செய்வார்கள்.

நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

வி.கே.பாண்டியன்

வி.கே.பாண்டியன் கடந்த 10 ஆண்டாக பல துறைகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவரை குறை சொல்வது துரதிர்ஷ்டவசமானது. வி.கே.பாண்டியன் நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசா..? நவீன் பட்நாயக் பரபரப்பு விளக்கம்! | Naveen Patnaik First Reaction After Odisha Defeat

அவர் கடும் உழைப்பாளி. கடந்த 2 புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் வி.கே.பாண்டியன் செய்த சேவை மகத்தானது" என்று தெரிவித்துள்ளார். ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அரசு பொறுப்பை உதறிவிட்டு நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.