தொடர் ஏமாற்றம்; இந்திய அணியில் வாய்ப்பில்லை - ஓய்வு முடிவை எடுத்த இளம்வீரர்
இந்திய இளம் வீரர் விரைவில் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது.
நவ்தீப் சைனி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானவர் நவ்தீப் சைனி. 2019ல் இந்திய அளியில் வேகப்பந்து வீச்சாளராக காணப்பட்டார். அதன்பின் டிசம்பரில் ஒருநாள் போட்டியிலும் விளையாடினார்.
தொடர்ந்து, 2021ல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினார். இதனால் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பிடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஓய்வு
கடந்த 2 வருடங்களிலும் காயம் காரணமாக அவர் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் முகேஷ் குமார், சிராஜ் போன்றோர் இடம்பெற்றதால் நவ்தீப் சைனி இடம்பிடிப்பதில் சிக்கல் உள்ளது.
இதனால் அதிருப்தியில் இருந்த அவர் இந்திய கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி வேறு நாட்டு அணிக்கு விளையாட முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.