ரிஷப் பண்டின் முன்னாள் காதலிக்கு ஸ்கெட்ச் போடும் பாகிஸ்தான் இளம் வீரர்!
ரிஷப் பண்ட் முன்னாள் காதலியை நசீம்ஷா, இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்ததால் கிசுகிசுப்பு கிளம்பியுள்ளது.
ஊர்வசி ரவுடேலா
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடேலா(28), ரிஷப் பண்https://ibctamilnadu.com/article/dhoni-is-god-for-rishabbant-nithish-rana-talks-1623930231ட் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். திடீரென இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து அவர் குறித்து பொதுவெளியில் ஊர்வசி தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
இருவரும் ஒருவருக்கொருவர் பதிலடி கொடுத்துக் கொண்டு வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நசீம்ஷா(19), ஊர்வசியை இன்ஸ்டாகிராமில் பிந்தொடர்ந்துள்ளார்.
நசீம்ஷா
அதனை கவனித்த ரசிகர்கள் இணையத்தில் விவாதிக்க தொடங்கினர். இதை அறிந்த நஷீம்ஷா உடனே அன்பாலோ செய்துவிட்டார். இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் மோதியபோதே இவர்களுக்கு இடையேயான கிசுகிசு தொடங்கிவிட்டது.
அந்தப் போட்டியை நேரில் காண வந்திருந்த ஊர்வசி ரவுடேலா, நசீம்ஷாவை பார்த்து அடிக்கடி புன்னகைத்தார். மேலும், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நசீம் ஷாவின் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.
நசீம் ஷாவிடமும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மறுப்பு தெரிவித்த அவர், ஊர்வசி ரவுடேலா யார் என்றே தனக்கு தெரியாது என பல்டி அடித்துவிட்டார். நீங்கள் நினைப்பது போல எந்த எண்ணமும் என்னிடம் இல்லை, தேவையில்லாத கதைகளை பற்றி பேச வேண்டாம் எனவும் கூறியியுள்ளார்.